பதவி ஏற்புக்கு சீன சனாதிபதியை அழைக்கிறார் ரம்ப்?

பதவி ஏற்புக்கு சீன சனாதிபதியை அழைக்கிறார் ரம்ப்?

அமெரிக்காவின் அடுத்த சனாதிபதி ரம்ப் தனது பதவி ஏற்பு நிகழ்வுக்கு (inauguration) சீன சனாதிபதியை அழைத்துள்ளதாக CBS செய்திகள் கூறுகின்றன. ஜனவரி 20ம் திகதி இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுக்கு நவம்பர் மாத ஆரம்பித்திலேயே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ரம்ப் ஆட்சியில் இந்திய பிரதமர் மோதி (Howdy Modi) மீது நெருக்கம் கொண்டிருந்த ரம்ப் இம்முறை சீயை நாடியது ஆச்சரியமாக உள்ளது. இந்த அழைப்பு இதுவரை முறைப்படி பகிரங்கம் செய்யப்படவில்லை.

கடந்த கிழமை அமெரிக்க செய்தி நிறுவனமான NBC செய்தி நிறுவனத்துக்கு செவ்வி ஒன்றை வழங்கிய ரம்ப் தான் அந்த கிழமை சீயுடன் தொலைபேசியில் பேசியதாக கூறியிருந்தார். ஆனால் பேச்சு விபரம் எதையும் வெளியிடவில்லை.

ரம்ப் தனது அரசுக்கு பல சீன காழ்ப்பு கொண்டவர்களை நியமிக்க உள்ள நிலையில் பதவி ஏற்புக்கு சீயை அழைப்பது பலரையும் குழப்பி உள்ளது. சனாதிபதி சீ அந்த அழைப்பை ஏற்றாரா என்றும் அறியப்படவில்லை.