செல்வந்தர்களிடம் பணம் பெற்று அமெரிக்க தூதுவர் பதவிகள் வழங்கப்பட்டு வருவதாத அமெரிக்காவின் CBS செய்தி நிறுவனம் இன்று கூறியுள்ளது. Doug Manchester என்ற பல பில்லியன்கள் சொத்துக்களை கொண்ட செல்வந்தரிடம் இருந்து ரம்பின் கட்சியான Repulican கட்சிக்கு பணம் பெற்று, அவரை பஹாமாஸுக்கு (Bhamas) தூதுவராக நியமிக்க முனைத்துள்ளது Republican கட்சி.
.
Doug Manchester ஒரு ரம்ப் ஆதரவாளர். அவர் $1 மில்லியன் பணத்தை ரம்பின் ஜனாதிபதி பதியேற்பு வைபவத்துக்கு வழங்கி இருந்தார். மறுதினம் Doug Manchester பஹாமாஸ் தூதுவராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அனால் அந்த நியமனம் நடைமுறைப்படுவது இழுபட்டு வந்துள்ளது.
.
கடந்த செப்டெம்பர் மாதம் Dorain என்ற சூறாவளி பஹாமாஸை தாக்கியபின் Doug Manchester தனது சொந்த விமானத்தில் நிவாரண பொருட்களை எடுத்துச்சென்று வழங்கினார். ஆனாலும் அவருக்கு தூதர் பதவி வழங்குதல் இழுத்ததடிக்கப்பட்டது.
.
பின்னர் Ronna McDaniel என்ற Republican கட்சி செயலாளர் ஈமெயில் மூலம் கட்சிக்கு மேலும் $500,000 நன்கொடை வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மறுத்த செல்வந்தர், தனது மனைவி பெயரில் $100,000 வழங்கி இருந்தார்.
.
விசயம் பகிரங்கத்துக்கு வந்த நிலையில் கட்சி செல்வந்தரின் பணத்தை திருப்பி வழங்க தீர்மானித்துள்ளது.
.
ஐரோப்பிய ஒன்றிய தூதராக செயல்படும் Gordon Sondland என்பவர் ரம்பின் பதவியேற்பு நிதியத்துக்கு $1 மில்லியன் நன்கொடை வழங்கி உள்ளார்.
.
Robin Bernstei, Lana Marks ஆகியோர் ஆளுக்கு $100,000 செலுத்தி ரம்பின் Mar-a-Lago club அங்கத்துவம் பெற்று Dominican Republic, South Africa ஆகிய இடங்களில் பதவி வகிக்கின்றனர்.
.
அமெரிக்காவில் சுமார் 1/3 பங்கு பதவிகளை ஜனாதிபதி தனது கட்சி ஆதரவாளருக்கு வழங்குவது சாதாரணம். ஆனால் ரம்ப் சுமார் 1/2 பங்கு பதவிகளை தனது கட்சி ஆதரவாளருக்கு வழங்கி உள்ளார்.
.