Welthungerhilfe என்ற அமைப்பும் Concern Worlwide என்ற அமைப்பும் இணைந்து வெளியிட்ட 2019 ஆம் ஆண்டுக்கான Global Hunger Index (GHI) என்ற பட்டினி பட்டியலில் இந்தியா 102 ஆம் இடத்தில் உள்ளது.
.
மொத்தம் 117 நாடுகளின் தரவுகளை உள்ளடக்கிய இந்த கணிப்பு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அஸ்ரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் போன்ற பல செல்வந்த நாடுகளை உள்ளடக்கவில்லை.
.
இந்த பட்டியலில் இலங்கை 66 ஆம் இடத்திலும், பங்களாதேசம் 88 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 94 ஆம் இடத்திலும் உள்ளன. சனத்தொகை கூடிய நாடான சீனா 25 ஆம் இடத்தில் உள்ளது. அதேவேளை மலேசியா 57 ஆம் இடத்தில் உள்ளது.
.
இந்த பட்டியலின் கடைசி நாடாக Central African Rebuplic 117 ஆவது இடத்தில் உள்ளது. யுத்தத்தில் மாண்டுள்ள யெமென் 116 ஆம் இடத்தில் உள்ளது.
.