வளர்ந்து வரும் சீனாவுக்கு போட்டியாக அமெரிக்கா பசிபிக் தீவுகள் எங்கும் தூதரகங்களை நிறுவி வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் இந்த தீவுகளில் தனது ஆதிக்கத்தை வர்க்க முனைகிறது அமெரிக்கா.
Niue என்ற நாடு 2,000 க்கும் குறைவான மக்களையே கொண்டது. அதற்கும் ஒரு தூதரகம் அமைக்கவுள்ளது அமெரிக்கா. சுமார் 20,000 மக்களை கொண்ட Cooks Islands என்ற நாடும் அமெரிக்க தூதரகத்தை பெறவுள்ளது.
திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் அமெரிக்க சனாதிபதி பைடென் US-Pacific Islands Forum என்ற அமர்வையும் நிகழ்த்தவுள்ளார்.
அஸ்ரேலியா, Cook Islands, Micronesia, Fiji, French Polynesia, Kiribati, Nauru, New Caledonia, நியூ சிலாந்து, Niue, Palau, பப்புவா நியூ கினியா, Marshall Islands, Samoa, Solomon Islands, Tonga, Tuvalu, Vanuatu ஆகிய 18 நாடுகள் இந்த திட்டத்துள் அடங்கும்.
வரும் 10 ஆண்டுகளில் அமெரிக்கா $810 மில்லியன் பெறுமதியான உதவிகளை இந்த நாடுகளுக்கு செய்யவுள்ளது.
ஆனால் Solomon Islands பிரதமர் Manasseh Sogavare மேற்படி அமர்வில் பங்கு கொள்ளவில்லை. Solomon Islands ஏற்கனவே சீனாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளது.
Vanuatu பிரதமரும் மேற்படி அமர்வில் பங்கெடுக்கார் என்று கூறப்படுகிறது.