பங்களாதேஷ் இந்தியாவின் புதிய நெருக்கடி

பங்களாதேஷ் இந்தியாவின் புதிய நெருக்கடி

பங்களாதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற உள்நாட்டு அரசியல் குழப்பத்தில் இந்தியா கால்விட்டு தற்போது நெருக்கடியான நிலையில் உள்ளது.

சுமார் 15 ஆண்டுகள் ஆட்சி செய்த பங்களாதேஷ் பிரதமர் ஹசினா (Hasina) ஆர்ப்பாட்டம் செய்த மாணவரால் விரட்டி அடிக்கப்பட்டபோது இந்தியா அவரை டெல்லி சென்று தங்க அனுமதித்தது.

ஹசினா இந்திய அரசியல் தலைவர்கள் பலருடன் நெருக்கமான உறவை கொண்டிருந்தவர். அதனால் ஹசினா ஆட்சி காலத்தில் பங்களாதேஷ் இந்தியாவுடன் நலமான உறவை கொண்டிருந்தது. ஆனால் இந்தியா BNP (Bangladesh Nationalist Party) என்ற பங்களாதேஷின் எதிர்கட்சியுடன் எப்போதும் முரண்பட்ட போக்கை கொண்டிருந்தது.

நோபல் பரிசு பெற்ற Yunus என்பவரின் கீழ் இயங்கும் தற்போதைய பங்களாதேஷின் இடைக்கால அரசில் எதிர்கட்சி BNP பிரதான பங்கு கொண்டுள்ளது. அதனால் இந்தியா தற்போதைய பங்களாதேஷ் அரசுடன் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை. மோதியும் Yunus உம் மட்டுமே தொலைபேசியில் உரையாடி உள்ளனர்.

தற்போதைய கணிப்புப்படி அடுத்த தேர்தலில் BNP கட்சியே வெல்லும். அவ்வாறு இடம்பெற்றால் இந்தியா மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும். பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளை தனது ஆளுமையில் வைத்திருப்பது இந்தியாவுக்கு அவசியம்.

தற்போதைய அல்லது அடுத்த பங்களாதேஷ் அரசு ஹசினாவை நாடுகடத்த கேட்டால் அதுவும் இந்தியாவுக்கு தலையிடி ஆகும்.