முன்னாள் பங்களாதேஷ் அமைச்சர் ஒருவரின் $500 மில்லியன் திருட்டு சொத்துக்கள் தொடர்பாக Al Jazeera செய்தி நிறுவனம் துப்பறியும் ஆக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் Hasina ஆட்சியில் Land Minister ஆக பதவி வகித்த 55 வயது Saifuzzaman Chowdhury என்பவரே மேற்படி அமைச்சர்.
இவரின் லண்டன் வீடு $14 மில்லியன் பெறுமதியானது. பிரித்தானியாவில் மட்டும் இவருக்கு 360 வீடுகள் உள்ளன. அவை வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இவருக்கு அமெரிக்கா, டுபாய் ஆகிய இடங்களிலும் சொத்துக்கள் உள்ளன.
பங்களாதேஷ் சட்டப்படி அமைச்சராகிய Chowdhury தனது வெளிநாட்டு சொத்துக்களை ஆண்டுதோறும் செய்யும் பங்களாதேஷ் வருமான வரி (income tax) பதிவுகளில் காட்டியிருத்தல் வேண்டும். ஆனால் அவர் தனது வெளிநாட்டு சொத்துக்களை வருமான வரி பதிவுகளில் காட்டியிருக்கவில்லை.
ஆண்டுக்கு $13,000 ஊதியம் மட்டும் பெற்ற இவர் $500 மில்லியன் சொத்துக்களை எவ்வாறு பெற்றார் என்று வியக்கின்றனர் மக்கள்.
அது மட்டுமன்றி ஆண்டு ஒன்றில் பங்களாதேஷ் நாட்டவர் $12,000 மட்டுமே வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லலாம் என்றிருக்க இந்த அமைச்சர் பெருமளவு பணத்தை நாட்டுக்கு வெளியே எடுத்தமையும் வியக்க வைக்கிறது.