மியன்மாரில் இருந்து அகதிகளாக இடம்பெயர்ந்து பங்களாதேசத்தில் தங்கியிருந்த ரோஹிங்கியா அகதிகளின் Balukhali முகாமில் ஏற்பட்ட தீக்கு குறைந்தது 20 அகதிகள் பலியாகி உள்ளனர். அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இங்கு சுமார் 1 மில்லியன் ரோஹிங்கியா அகதிகள் தங்கி உள்ளனர்.
ஐ.நா. அகதிகள் அமைப்பின் பிரதிநிதி Louise Donovan குறைந்தது 400 அகதிகளை தற்போதும் காணவில்லை என்றுள்ளார். அத்துடன் சுமார் 45,000 பேர் மீண்டும் அகதிகள் ஆகினர் என்றும் கூறியுள்ளார்.
அகதி முகாமை சுற்றி வைக்கப்பட்டு இருந்த முள் வேலியும் அகதிகள் தீயில் இருந்து தப்பி ஓடுவதற்கு இடராக இருந்துள்ளது என்று கூறியுள்ளார் Norwegian Refugee Council அதிகாரி Jan Egeland.
அங்கு நிலவிய கடும் காற்று, அகதிகள் வைத்திருந்த வாயு அடுப்புகள் ஆகியனவும் தீ வேகமாக பரவ காரணமாக இருந்துள்ளன. சுமார் 250 ஏக்கர் இத்தீக்கு இரையாகி உள்ளது செய்மதி படம் மூலம் அறியப்பட்டு உள்ளது.