பங்களாதேசும் அதானி மின் உற்பத்தியில் முரண்பாடு

பங்களாதேசும் அதானி மின் உற்பத்தியில் முரண்பாடு

அதானி (Adani) மீதான அமெரிக்காவின் ஊழல் குற்றச்சாட்டை சாதகமாக பயன்படுத்தி தற்போது பங்களாதேசும் (Bangladesh) அதானியுடன் கொண்டுள்ள மின் உற்பத்தி இணக்கத்தை முறிக்க முனைகிறது.

2017ம் ஆண்டு இந்திய பிரதமர் மோதியின் அரசு தற்போது விரட்டப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் Sheikh Hasina உதவியுடன் அதானியின் நிறுவனம் பங்களாதேசுக்கு மின் விற்பனை செய்யும் 25 ஆண்டுகால உடன்பாடு ஒன்றுக்கு கேள்விகள் (tender) எதுவும் இன்றி இணங்கி இருந்தது.

இந்த மின் இந்தியாவின் Godda நகரில் உற்பத்தி செய்யப்பட்டு பங்களாதேசுக்கு எல்லை தாண்டி வழங்கப்படுகிறது. அத்துடன் Godda வழங்கும் மின்னின் அலகு ஒன்றுக்கான விலை ஏனைய இந்திய மின் விலையிலும் 55% அதிகம் என்கிறது பங்களாதேஷ்.

பிரதமர் Sheikh Hasina அரசு பகிரங்க கேள்வி எதுவும் இன்றி பங்களாதேஷின் நலனுக்கு எதிராக மேற்படி இணக்கத்தை செய்துள்ளது என்கிறது தற்போதை பங்களாதேஷ் அரசு.

2023ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பங்களாதேஷ் தான் அதனியிடம் இருந்து பெறும் மின்னுக்குரிய கட்டணத்தை செலுத்தவில்லை. செலுத்த தவறிய அத்தொகை $900 மில்லியன் என்கிறது அதானி. ஆனால் அத்தொகை $650 மில்லியன் என்கிறது பங்களாதேஷ்.

இந்த முரண்பாட்டுக்கு இன்னோர் காரணம் அதானி இந்திய அரசிடம் இருந்து பெரும் வரி விலக்கு நயத்தை பங்களாதேசுக்கு வழங்கவில்லை என்பதே. அவர்கள் செய்த ஒப்பந்தப்படி வரி விலக்கால் அடையும் நன்மைகளின் ஒரு பங்கு பங்களாதேசுக்கு வழங்கப்படல் வேண்டும்.

இந்த விசயத்தை விசாரணை செய்ய பங்களாதேஷ் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

இந்தியா அண்டை நாடுகளில் கேள்வி (public tender) இன்றி அரசியல் நயனுக்காக இலஞ்சம் வழங்கி செய்யும் பல இணக்கங்கள் அண்டை நாடுகளில் ஆட்சிகள் மாறும்போது இடரை சந்திக்கின்றன.