பங்களாதேசத்தின் வடகிழக்கையும், அதை அண்டிய கிழக்கு இந்திய மாநிலங்களிலும் கனத்த மழை பொழிவதால் அப்பகுதி வெள்ளத்தில் மாண்டுள்ளது. அத்துடனுடன் சுமார் 50 பேர் வரை பலியாகியும் உள்ளனர்.
Nandail என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மின்னல்களுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். அதில் 12, 14 வயதுடையோரும் அடங்குவர்.
Chittagong என்ற இடத்தில் மண் சரிவுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.
Sylhet என்ற இடம் கடந்த மாத வெள்ளத்தால் ஏற்கனவே ஊறிப்போய் உள்ளது. கடந்த சில தினங்களில் பொழிந்த மேலதிக மழை நிலைமையை மேலும் பாதித்து உள்ளது. கடந்த மாத வெள்ளத்துக்கு ஏற்கனவே 10 பேர் பலியாகி இருந்தனர்.
இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் 16 பேர் பலியாகி உள்ளனர் என்று அந்த மாநில அரசு கூறியுள்ளது. அசாமில் 1.8 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதேவேளை ஐரோப்பா வெப்ப கொடுமையில் மாண்டுள்ளது. ஜெர்மனியின் சில இடங்கள் 38 C வெப்பநிலையை அடைந்து உள்ளன. ஸ்பெயினில் (Spain) 22,240 ஏக்கர் காடுகள் காட்டு தீயால் அழிக்கப்பட்டு உள்ளன. அங்கு வெப்பநிலை 42 C வரை உயர்ந்து உள்ளது. சில இடங்களில் வழமையான சராசரியிலும் 15 C அதிக வெப்பநிலை பதியப்பட்டு உள்ளது.
பிரித்தானியாவில் வெப்பநிலை 30 C வரை பதியப்பட்டு உள்ளது.