முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்பின் வருமான வரி விபரங்கள் அமெரிக்காவின் House சபையால் பகிரங்கம் செய்யப்பட்டு உள்ளன. ரம்ப் தனது வரி விபரங்கள் பகிரங்கத்துக்கு வருவதை தடுக்க பல வழக்குகளை தொடர்ந்து இருந்தாலும் இறுதியில் வரி விபரத்தை பகிரங்கப்படுத்தும் உரிமையை அமெரிக்க உயர் நீதிமன்றம் House சபைக்கு வழங்கி இருந்தது.
அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் ரம்பின் Republican கட்சி House சபைக்கான பெரும்பான்மையை வென்று இருந்தாலும் அந்த சபை ஜனவரி மாதம் முதலே ஆட்சிக்கு வரும். தற்போது ஆட்சியில் உள்ள House சபை Democratic கட்சியின் பெரும்பான்மையை கொண்டது.
2015 முதல் 2020 வரை ரம்ப் செலுத்திய வரிகள்.
2015ம் ஆண்டு: $641,931
2016ம் ஆண்டு: $750
2017ம் ஆண்டு: $750
2018ம் ஆண்டு: $999,466
2019ம் ஆண்டு: $133,445
2020ம் ஆண்டு: $0
சீனாவுடன் முட்டி மோதிய ரம்பிடம் பல சீன வங்கி கணக்குகள் இருந்தமையும் அறிய வந்துள்ளது. அயர்லாந்து மற்றும் பிரித்தானிய வங்கிகளிலும் ரம்பிக்கு கணக்குகள் இருந்துள்ளன.
Azerbaijan, சீனா, இந்தியா, இந்தோனேசியா, பனாமா, பிலிப்பீன், St. Martin, துருக்கி, UAE ஆகிய நாடுகளுக்கும் ரம்ப் சிலகாலம் வரி செலுத்தியுள்ளார். இவை அந்த நாடுகளில் அவர் பெற்ற வருமானங்களுக்கான வரிகள்.