நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் பலஸ்தானை ஏற்பு

நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் பலஸ்தானை ஏற்பு

ஐரோப்பிய நாடுகளான நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் மே மாதம் 28ம் திகதி கூட்டாக பலஸ்தான் என்ற நாட்டை (state of Palestine) ஏற்றுக்கொள்ள உள்ளன. இந்த 3 நாடுகளுடன் தற்போது மொத்தம் 146 நாடுகள் பலஸ்தானை ஏற்றுக்கொண்டுள்ளன.

இதனால் விசனம் கொண்ட இஸ்ரேல் மேற்படி 3 நாடுகளுக்குமான தனது தூதர்களை திருப்பி அழைத்துள்ளது. அத்துடன் அந்த நாடுகளின் இஸ்ரேலுக்கான தூதர்களை அழைத்து ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலை காண்பிக்க உள்ளது.

இலங்கை, ரஷ்யா (USSR), இந்தியா, சீனா போன்ற நாடுகள் 1988ம் ஆண்டே பலஸ்தானை ஏற்றுக்கொண்டுள்ளன. வேறு சில ஐரோப்பிய நாடுகள் தாம் சோவியத் கீழ் இருக்கும் வேளையில் பலஸ்தானை ஏற்றுக்கொண்டு உள்ளன.

சுவீடன் 2014ம் ஆண்டும் ஐஸ்லாந்து 2011ம் ஆண்டிலும் பலஸ்தானை ஏற்றுக்கொண்டுள்ளன.