நைஜீரியாவின் Lagos நகரில் எவரும் குடியிருக்காத மாடி வீடு ஒன்றில் US$ 43 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர் தாள்கள் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. இந்த அமெரிக்க தாள்களுடன் மேலும் 27 ஆயிரம் பெறுமதியான பிரித்தானிய பவுன்ஸ் தாள்களும் இருந்துள்ளன. இந்த தாள்கள் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு, பெட்டகங்களில் வைக்கப்பட்டு இருந்தன.
.
.
அரசின் ஊழல் தடுப்பு திணைக்களத்தால் (anti-corruption agency) இப்பணம் கைப்பற்றப்பட்ட பின் இது அந்நாடு உளவு திணைக்களத்து (spy agency) உரியது என்றும், அது உளவு வேலைகளுக்கு பயன்படுத்தப்பட இருந்தன என்றும் கூறப்படுகிறது. இப்பணம் இருந்த மாடித்தொடர் பெருமளவில் அரசியல் புள்ளிகள் வாழும் மாடித்தொடர் என்றும் கூறப்படுகிறது.
.
.
நைஜீரியாவின் உளவு திணைக்கள உயர் அதிகாரி அண்மையில் பதிவி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அத்துடன் நிவாரணங்களுக்கான அதிகாரி ஒருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
.
.
நைஜீரியாவின் வடகிழக்கே பெரும் பஞ்சம் பரவி உள்ளது. இப்பகுதியில் சுமார் 4.7 மில்லியன் மக்கள் உதவிகளில் மட்டும் தங்கி உள்ளனர். இப்பகுதியில் Boko Karam என்ற ஆயுத குழுவும் பரவி உள்ளது.
.
.
வேறு ஒரு செய்தியின்படி, எண்ணெய் அகழ்வு உரிமை பெறும் நோக்கில், உலக எண்ணெய் நிறுவனங்கள் சுமார் $1.3 பில்லியன் பணத்தை நைஜீரியாவின் அரசியல்வாதிகளுக்கு வழங்கி உள்ளன. இப்பணத்தின் பெரும் தொகையும் களவாடப்பட்டு உள்ளன.
.