இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள Hathras மாவட்டத்தில் செவ்வாய் இடம்பெற்ற இந்து மத நிகழ்வொன்றில் ஏற்பட்ட நெரிசலுக்கு பலியானோர் தொகை 121 ஆக உயர்ந்துள்ளது.
மரணித்தோரில் 112 பேர் பெண்கள் என்றும், 7 பேர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த பேரழிவின் பின்னர் Bhole Baba என்ற மேற்படி நிகழ்வின் போதகர் தலைமறைவாகி உள்ளார்.
நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தோர் 80,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று போலீசாருக்கு கூறியிருந்தாலும் நிகழ்வுக்கு சுமார் 250,000 பேர் வந்துள்ளனர்.
நிகழ்ச்சி முடிந்து பாபா வெளியேறும் நேரத்தில் அவரை தொட்டு வணங்க முண்டியடித்தோரே நெரிசலுக்கு காரணமாகினர்.