Rotterdam என நெதர்லாந்து துறைமுகத்தில் 4 தொன் cocaine போதை அகப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். ஐரோப்பாவில் நெதர்லாந்தும், பெல்ஜியமும் தற்போது போதை கடத்தலின் மையங்களாக மாறியுள்ளன.
மேற்படி போதை இரண்டு கொள்கலன்களில் இருந்துள்ளன. இவை சோயா பைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளன. இவற்றின் சந்தை பெறுமதி சுமார் $362 மில்லியன் என்று கூறப்படுகிறது.
தென் அமெரிக்கவின் Paraguay நாட்டில் இருந்து பயணித்த இந்த போதை, Uruguay என்ற நாடு மூலம் நெதர்லாந்து வந்து அங்கிருந்து போர்த்துக்கல் செல்ல இருந்தது. கைப்பற்றப்பட்ட போதை தற்போது அதிகாரிகளால் அழிக்கப்பட்டு உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதமும் $348 மில்லியன் பெறுமதியான போதை இங்கு கைப்பற்றப்பட்டு இருந்தது.
கடந்த ஆண்டு மொத்தம் சுமார் 65.6 தொன் போதை இங்கு அகப்பட்டு இருந்தது.