நீதிமன்றம்: இலங்கை அழிவுக்கு ராஜபக்சக்கள் காரணம்

நீதிமன்றம்: இலங்கை அழிவுக்கு ராஜபக்சக்கள் காரணம்

இலங்கையின் பொருளாதார அழிவுக்கு இரண்டு முன்னாள் சனாதிபதிகளான கோத்தபாயா, மகிந்த உட்பட 13 தலைவர்களும், உயர் அதிகாரிகளும் காரணம் என்று இலங்கையின் உயர் நீதிமன்றம் செவ்வாய் தீர்ப்பு கூறியுள்ளது.

Transparency International Sri Lanka இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது. இந்த தீர்ப்பு மேற்படி 13 தலைவர்கள் மீது தண்டனை எதையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் இந்த தண்டனையை பயன்படுத்தி வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம்.

வழக்கை தாக்கல் செய்த TISL அமைப்பின் செலவுகளை ஈடு செய்ய மட்டும் Rs 150,000 வழங்கப்படுகிறது. TISL நட்ட ஈடு எதையும் கேட்டிருக்கவும் இல்லை.

முன்னாள் நிதி அமைச்சர் பசில், இரண்டு முன்னாள் மத்திய வங்கி தலைவர்கள் ஆகியோரும் இந்த குற்றத்தில் அடங்குவர்.