துருக்கி-சிரியா எல்லையோரம் இடம்பெற்ற 7.8 அளவிலான நில நடுக்கத்துக்கு இதுவரை 22,000 பேர் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது. அதேவேளை பயனுள்ள தேடுதல் பணிகள் பலரை உயிருடன் மீட்டு உள்ளன.
நடுக்கம் இடம்பெற்று 100 மணித்தியாலங்களின் பின் 15 வயதுடைய Ayfer என்ற சிறுமியும், Fatma என்ற 13 வயதுடைய சகோதரியும் மீட்கப்பட்டு உள்ளனர்.
நடுக்கம் இடம்பெற்று சுமார் 76 மணித்தியாலங்களின் பின் Mithat Tabur என்பவரும் அவரின் 26, மற்றும் 30 வயதுடைய மகன்களும் மீட்கப்பட்டு உள்ளனர்.
Aleppo பகுதியின் இடிபாடுள் அகப்பட்டு இருந்த தாய் ஒரு ஆண் குழந்தையை பெற்ற பின் மரணமாகி இருந்தார். ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார்.
Hatay மாநிலத்தில் நடுக்கத்தின் பின் சுமார் 90 மணித்தியாலத்தில் பிறந்து 10 தினங்களை மட்டுமே கொண்டிருந்த ஆண் குழந்தையும், அவனின் தாயும் மீட்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலநடுக்கம் கடந்த 100 ஆண்டுகளில் அங்கு இடம்பெற்ற மிக பெரிய அழிவுகளை கொண்ட நிலநடுக்கம் ஆகிறது.