நியூ யோர் நகர் பறக்கிறார் ரம்ப், நாளை சரண்

Florida மாநிலத்தில் வாழும் முன்னாள் அமெரிக்க சனாதிபதி தற்போது நியூ யார்க் நகரை நோக்கி பறந்து கொண்டிருக்கிறார். இவர் நாளை செவ்வாய் நியூ யார்க் நீதிமன்றில் சரணடைவார். இவர் மீது 30 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த வழக்குகளில் பிரதானமானது ரம்ப் Stormy Daniel என்ற உயர்வர்க்க விபசாரிக்கு 2016ம் ஆண்டு சட்டவிரோத முறையில் பணம் வழங்கி ($130,000 hush money) உண்மையை மறைக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டே.

அமெரிக்க சனாதிபதி ஒருவர் இவ்வாறு சரண் அடைவது இதுவே முதல் தடவை.

சரண் அடையும் ரம்ப் தான் குற்றவாளி அல்ல என்று வாதாடுவார் என்று கூறப்படுகிறது. அதன்பின் வழக்கு ஆரம்பமாகும். வழக்கு வீடியோ மூலம் ஒளிபரப்படுமா என்பது இன்று தீர்மானிக்கப்படும்.

அதேவேளை ரம்ப் 2024ம் ஆண்டில் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.