கனடிய காட்டுத்தீ புகை மண்டலம் அமெரிக்காவின் நியூ யார்க் (New York) நகர் வரை பரவி உள்ளது. இதனால் நியூ யார்க் நகர் கரும் புகை மண்டலத்தால் மூடப்பட்டு உள்ளது. கனடாவின் தலைநகர் ஓட்டாவாவும் (Ottawa) கரும் காட்டுத்தீ புகையில் அமிழ்ந்து உள்ளது.
இந்த காட்டுத்தீ புகை நியூ யார்க் நகரின் வளியையும் பலமாக மாசடைய செய்துள்ளது. சிலர் தம்மை பாதுகாக்கும் நோக்கில் முக கவசங்களை அணிந்துள்ளனர்.
இங்கு வளி மாசு அளவு ஆபத்தான நிலைக்கு அதிகரித்து உள்ளது. அண்மையில் உள்ள Syracuse என்ற நகரில் air quality index 400 ஆக உள்ளது. இந்த சுட்டி 100 க்கு மேல் சென்றால் அந்த வளி சுவாசத்துக்கு ஆபத்தானது. இந்த சுட்டி 0 முதல் 500 வரையானது, அதில் 0 சுட்டி மிக சிறந்த வளியை குறிக்கும்.
சுவாச இடரில் இருந்து மாணவரை பாதுகாக்கும் நோக்கில் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
பார்வை தூரம் (visibility) குறைந்ததால் பல விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டு அல்லது பின்போடப்பட்டு உள்ளன.
கனடாவின் கிழக்கு பகுதியில் சுமார் 250 காட்டுத்தீ கடந்த சில கிழமைகளாக எரிந்து வருகின்றன.