நியூ சிலாந்து butter என்று இந்திய butter விற்பனை

நியூ சிலாந்து butter என்று இந்திய butter விற்பனை

Milkio Foods Limited என்ற நியூ சிலாந்தின் பால் பொருள் உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் இருந்து பெற்ற butter ஐ “100% pure New Zealand” butter என்று பொதி செய்து விற்பனை செய்ததால் அதன் மீது 420,000 நியூ சிலாந்து டாலர்கள் ($261,452) தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூ சிலாந்தின் Hamilton நகரை தளமாக கொண்ட Milkio தாம் Fair Trading Act சட்டத்தின் 15 விதிகளை மீறி உள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளது.

நியூ சிலாந்து உலகில் 8ஆவது பெரிய பால் உற்பத்தி செய்யும் நாடு. இதன் உற்பத்தியின் குறைந்தது 95% வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையான ஒரு ஆண்டில் நியூ சிலாந்து $14.7 பில்லியன் பெறுமதியான பாலுணவை ஏற்றுமதி செய்துள்ளது.