நியூசிலாந்து பிரதமர் பதவி நீங்குகிறார், மக்கள் வியப்பில்

நியூசிலாந்து பிரதமர் பதவி நீங்குகிறார், மக்கள் வியப்பில்

நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern தான் பதவி விலகுவதாக இன்று வியாழன் அறிவித்துள்ளார். இவரின் இந்த திடீர் பதவி விலகலுக்கு குளறுபடிகள், குற்றசாட்டுகள் எதுவும் காரணம் அல்ல என்று கூறப்பட்டாலும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரதமர் பதவியை தொடர அவர் தன்னிடம் மேற்கொண்டு எதுவும் இல்லை என்று Jacinda கூறியுள்ளார்.  இவர் பெப்ரவரி 7ம் திகதி பதவி நீங்குவார். இந்த ஞாயிறு இவரின் கட்சி புதிய பிரதமரை தெரிவு செய்யும்.

2017ம் ஆண்டு தனது 37 ஆவது வயதில் பிரதமர் பதவியை அடைந்த இவரே உலகில் அதி குறைந்த வயதில் நாட்டின் தலைமை பதவியை வென்றவர்.

பின் 2020ம் ஆண்டு பொது தேர்தலில் இவரின் Labour Party பெரும் வெற்றியை அடைந்திருந்தது.

இவர் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றாலும், நியூசிலாந்தில் நிலவும் பொருளாதார மாந்த நிலை பிரதமர் கொண்ட ஆதரவை குறைத்து வருகிறது.

வரும் அக்டோபர் மாதம் 14 திகதி அங்கு இடம்பெற்றவுள்ள பொது தேர்தலில் இவரின் கட்சி வெல்வது கடினம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.