கடும் வெப்பம் காரணமாக அஸ்ரேலியாவில் இடம்பெற்றுவரும் காட்டு தீயின் புகை நியூசிலாந்து வரை தெரிகிறது என்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இந்த தீ உக்கிரம் அடையும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
.
New South Wales பகுதியில் மட்டும் 70 இடங்களில் காட்டு தீ பரவி வருவதாக கூறப்படுகிறது. Queensland பகுதியில் 50 இடங்களில் தீ பரவுகிறது.
.
இதுவரை குறைந்தது 159 வீடுகள் தீக்கு இரையாகி உள்ளன. சிட்னியை (Sydney) அண்டிய பகுதியே மிக ஆபத்தான நிலையில் உள்ளது. செவ்வாக்கிழமை இங்கு வெப்பநிலை 37 C ஆக இருக்கும்.
.
நியூசிலாந்தில் இருந்தும் தீயணைக்கும் படையினர் அஸ்ரேலியா வருகின்றனர்.
.
2009 ஆம் ஆண்டு விக்ரோறியா பகுதியில் இடம்பெற்ற காட்டு தீக்கு 173 பேர் பலியாகி இருந்தனர்.
.