அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடான நீஜரில் (Niger) இடம்பெற்ற இராணுவ கவிழ்ப்பு அந்த நாட்டை முன்னர் ஆக்கிரமித்து ஆண்ட பிரான்சுக்கே பெரும் நட்டமாகிறது. பிரான்சுக்கு யுரேனியம் வழங்கும் 3ஆவது பெரிய நாடு நிஜர்.
தனக்கு தேவையான மின்சாரத்தை பிரான்ஸ் பெருமளவில் அணுமின் உற்பத்தி மூலமே பெறுகிறது. அந்த அணுமின் உற்பத்திக்கு தேவையான யுரேனியத்தை (uranium) பிரான்ஸ் நிஜர் நாட்டில் இருந்தே பெறுகிறது. அன்மையில் இடம்பெற்ற இராணுவ கவிழ்ப்பு அந்த யுரேனிய வரவை குழப்பி உள்ளது.
Orano என்ற பிரெஞ்சு நிறுவனமே நிஜர் யுரேனியத்தை பிரான்சுக்கு எடுத்து சென்றது.
நிஜரில் இயங்கும் Air mines என்ற அகழ்வு நிறுவதில் Orano 63.4% உரிமையை கொண்டுள்ளது, Akokan mining site நிறுவனத்தில் Orano 59% உரிமையை கொண்டுள்ளது, Imouraren mine நிறுவனத்தில் Orano 63.52% உரிமையை கொண்டுள்ளது.
அதனால் இந்த இராணுவ அரசை விரட்ட பிரான்சும், மேற்கு நாடுகளும் தம்மால் முடிந்ததை செய்யும்.
ஆக்கிரமித்த ஐரோப்பியர் சென்றாலும் ஆக்கிரமிப்பு தொடர்கிறது.