இந்திய வட மாநிலமான ஹர்யானாவில் (Haryana) நான்கு தடவைகள் முதலமைச்சராக இருந்த Om Prakash Chautala தனது 82 ஆவது வயதில், சிறை தண்டனை ஒன்றை அனுபவிக்கும் காலத்தில், 12 ஆம் வகுப்பு சித்தியை அடைந்துள்ளார்.
.
.
மேற்படி முன்னாள் முதலமைச்சர் தனது நாலாவது ஆட்சி காலத்தில் செய்த ஊழல் குற்றத்துக்கான 10 வருட சிறைவாசம் செய்கையிலேயே இந்த சாதனையை புரிந்துள்ளார்.
.
.
2013 ஆம் ஆண்டு புது டெல்லி நீதிமன்ற நிரூபிப்புப்படி இந்த முதலமைச்சர் எந்தவித தகுதியும் அற்ற 3,206 நபர்களுக்கு, கள்ள ஆவணங்கள் தயாரித்து, ஆசிரியர் பதவி வழங்கி உள்ளார். அதவேளை தகுதி உடைய ஆசிரியர்களின் விண்ணப்பங்களை இவர் நிராகரித்தும் உள்ளார்.
.
.
இந்த முதலமைச்சர் Indian National Lok Dal கட்சியின் தலைவரும் ஆவார்.
.
மேற்படி முதலமைச்சருடன், அவரின் மகன் ஒருவர் உட்பட, மொத்தம் 54 பேர் சிறை சென்றுள்ளார்.
.