நான்கு குடிவரவில் உருவாகிய இந்தியா?

India

இந்தியாவின் ஆரம்பத்தை விபரிக்க முனைகிறது அண்மையில் வெளிவந்த “Early Indians: The Story of Our Ancestors and Where We Came From” என்ற புத்தகம். இந்த புத்தக கருத்துப்படி இன்றைய இந்தியா நான்கு பெரிய குடிவரவுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகளவில் DNA தரவுகளை மட்டும் கொண்டே இப்புத்தகத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் அடையப்பட்டுள்ளன.
.
இப்புத்தகத்தின்படி முதலாவது இந்திய குடிகள் ஆபிரிக்காவில் இருந்து சுமார் 65,000 வருடங்களுக்கு முன்னர் வந்துள்ளனர். தற்போதும் இந்தியாவின் 50%-65% வரையான மக்கள் இந்த வகைக்கு உட்பட்டவர்களே.
.
தற்போதைய விஞ்ஞானம் உலகின் அனைத்து மனிதமும் ஆபிரிக்காவில் இருந்து வந்ததாகவே கருதுகிறது.
.
இரண்டாவது குடிவரவாளர் ஈரானின் Zagros பகுதியில் இருந்து 9,000 முதல் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்துள்ளனர். இவர்கள் இந்தியாவின் தென் மேற்கு பகுதியில் குடியிருந்து உள்ளனர். விவசாயிகளான இவர்கள் படிப்படியாக முதல் வருகை இந்தியர்களுடன் கலந்து உள்ளனர். அப்போதே ஹரப்பா (Harappa Civilization) வளர்ந்து உள்ளது. இந்நாகரிகாம் கி.மு. 2600 முதல் கி.மு. 1900 வரை சிறப்பாக விளங்கி உள்ளது.
.
இந்தியாவை நோக்கிய மூன்றாம் வருகை கி.மு. 2000 வரையில் நிகழ்ந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய சீனர்கள் அசாம் போன்ற இந்தியாவின் கிழக்கு பகுதிக்கு வந்துள்ளனர். இந்தியாவில் உள்ள Mundari மற்றும் Khasi மொழிகள் இவர்களின் வரவால் உருவாவை என்று கூறப்படுகிறது. இவை ஆரிய, மற்றும் திராவிட மொழிகளுக்கு உரித்தானவை அல்ல.
.
நான்காவது பெரிய படையெடுப்பு கி.மு. 2000 முதல் கி.மு. 1000 வரையான காலத்தில் இடம்பெற்றுள்ளது. அப்போதே Indo-European மொழிகள் பேசும் மத்திய ஆசிய (central Asia) மக்கள் குடிவந்து உள்ளனர்.
.
மேலும் பல சிறிய குடிவரவுகள் இடம்பெற்று இருந்தாலும் அவை இந்திய குடியிருப்பை பெரிதும் மாற்றவில்லை.

.