அஸ்ரேலியாவில் இருந்து Australian Border Protection திணைக்களத்தால் இரவோடு இரவாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த இலங்கை தமிழ் குடும்பம் தற்காலிகமாக கடத்தலில் இருந்து தப்பியுள்ளது.
.
இந்த நாடு கடத்தல் தடுப்புக்கு அப்பகுதி Green கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Jenny Leong கடுமையாக உதவியுள்ளார்.
.
அகதி நிலை நிராகரிக்கப்பட்ட இந்த குடும்பத்தை நேற்று இரவு Australian Border Protection வாடகைக்கு அமர்த்திய Skytraders என்ற விமான சேவை மூலம் இலங்கைக்கு கடத்த இருந்தது. இரவு மெல்பேர்ன் விமான நிலையத்துக்கு சென்ற அகதிகளின் ஆதரவாளர்கள் காரணமாக நாடு கடத்தல் வரும் புதன்கிழமை வரை நீதிமன்றத்தால் பின் தள்ளப்பட்டு உள்ளது.
.
வரும் புதன்கிழமைக்குள் புதிய தீர்வு ஒன்று ஏற்படாவிடின், அந்த குடும்பம் மீண்டும் இலங்கைக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
.
தாயும், தந்தையும் 2012-13 ஆண்டுகளில் வள்ளங்கள் மூலம் அஸ்ரேலியா சென்றிருந்தனர். அவர்களின் இரண்டு பெண் பிள்ளைகளும் அஸ்ரேலியாவில் பிறந்தவர்கள்.
.