நாசா கைப்பற்றிய விண்கல் மாதிரி வெளியேறுகின்றது

நாசா கைப்பற்றிய விண்கல் மாதிரி வெளியேறுகின்றது

கடந்த செவ்வாய்க்கிழமை (2020/10/20) Bennu என்ற விண்கல்லில் தரை இறங்கிய நாசாவின் OSIRIS-REx என்ற விண்கலம் அந்த விண்கல்லின் சிறிதளவை (sample) எடுத்திருந்தது. அவற்றை மேலதிக ஆய்வு செய்யும் நோக்கில் பூமிக்கு கொண்டவருவதே நோக்கம். அனால் கைப்பற்றிய மாதிரியை கொண்டுள்ள கொள்கலம் முற்றாக மூடப்படாமையால் கைப்பற்றப்பட்டவற்றில் சிறிதளவு வெளியேற ஆரம்பித்து உள்ளன என்று நாசா வெள்ளிக்கிழமை கூறி உள்ளது.

Bennu வில் இருந்து 60 கிராம் மாதிரியை எடுக்கவே முதலில் திட்டம் இருந்தது. ஆனால் வசதி கிடைத்தால் சுமார் 400 கிராம் மாதிரி துளைந்து எடுக்கப்பட்டது. மிகையாக எடுக்கப்பட்ட மாதிரியால் அவற்றை கொண்டுள்ள கொள்கலம் முற்றாக மூடப்படாமல் உள்ளது என்கிறது நாசா. கொள்கலத்தின் மூடி சுமார் 1 cm அளவில் திறந்தபடியே உள்ளது. அவ்வழியேயே துகள்கள் வெளியேறுகின்றன. ஆனாலும் பெரிய அளவிலான மாதிரிகள் வெளியேறா என்று கருதப்டுகிறது.

2016 ஆம் ஆண்டு Florida மாநிலத்தில் உள்ள Cape Canaveral தளத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த இந்த விண்கலம் மீண்டும் பூமியை கைப்பற்றிய மாதிரியுடன் 2023 ஆண்டில் Utah மாநிலத்தல் தரையிறங்கும்.

விண்கல் Bennu சுமார் 320 மில்லியன் km தூரத்தில் பயணிக்கிறது. இந்த விண்கல்லின் விட்டம் 492 மீட்டர். பூமியில் இருந்து இந்த விண்கல் வரையான தூர ஒருவழி தொலைத்தொடர்புக்கு சுமார் 18.5 நிமிடங்கள் தேவை. இந்த திட்டத்துக்கு சுமார் $983 மில்லியன் செலவாகி இருந்தது.

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமே விண்கலம் Bennu வை நீங்கும். அதற்கு முன் தேவைப்பட்டால் OSIRIS-REx மீண்டும் மேலதிக மாதிரியை ஜனவரி 12 ஆம் திகதி கைப்பற்றும்.