நாசாவின் உதவியுடன், அமெரிக்க கலம் ஒன்று மூலம் இந்திய விண்வெளி வீரர் இந்த ஆண்டு முடிவுக்குள் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு (ISS, International Space Station) செல்வார் என்று கூறப்படுகிறது.
இந்த முயற்சிக்கான பேச்சுக்கள் தற்போது நடைபெறுவதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் Eric Garcetti தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் பைடெனை சந்தித்த இந்திய பிரதமர் மோதி இந்த விருப்பத்தை தெரிவித்து இருந்தார்.
ஆனாலும் நாசாவோ அல்லது இந்தியாவின் ISRO என்ற விண்வெளி அமைப்போ இதுவரை இந்த விசயம் தொடர்பாக விபரங்கள் எதையும் வெளியிடவில்லை.
இந்திய வீரர் ISS சொல்வதாயின் அவர் முதலில் அமெரிக்காவில் உரிய பயிற்சி பெறுவது அவசியம்.