அமெரிக்காவின் நாசா (NASA) மீண்டும் தனது விஞ்ஞானிகளை சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபடுகிறது. அதற்கு முதல் படியாக ஆகஸ்ட் 29ம் திகதி Space Launch System (SLS) என்ற மிக பெரியதோர் ஏவுகணை மூலம் விண்வெளி வீரர்களை கொண்டிராத Artemis 1 என்ற கலத்தை சந்திரனை சுற்றி வலம் வர வைக்க ஏவ இருந்தது. ஆனால் இயந்திர கோளாறு காரணமாக அன்றைய முயற்சி இடைநிறுத்தப்பட்டு இருந்தது.
இன்று இரண்டாம் தடவை இடம்பெறவிருந்த ஏவலும் கணையில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக இடைநிறுத்தப்பட்டு உள்ளது.
தற்போது ஏவு தளத்தில் உள்ள சுமார் 32 மாடிகளின் உயரத்துக்கு நிகரான உயரத்தை கொண்ட இந்த ஏவுகணை திருத்த வேலைகளுக்கு கட்டும் இடத்திற்கு மீண்டும் எடுத்து செல்லப்படால் மேலும் பல கிழமைகளுக்கு அல்லது மாதங்களுக்கு மூன்றாம் ஏவல் முயற்சி இடம்பெறாது.
ஒரு ஏவலுக்கு மட்டும் சுமார் $2 பில்லியன் செலவாகும். 2021ம் ஆண்டு மட்டும் இந்த திட்டத்துக்கு $2.5 பில்லியன் செலவாகி இருந்தது. இந்த திட்டத்தின் மொத்த செலவு சுமார் $23 பில்லியன் ஆக இருக்கும்.
2024ம் ஆண்டு ஏவப்பட உள்ள Artemis 2 விண்வெளி வீரருடன், சந்திரனில் இறங்காது, சந்திரனின் விண்ணில் சுற்றி வலம் வரும்.
2025ம் ஆண்டு ஏவப்பட உள்ள Artemis 3 விண்வெளி வீரரை சந்திரனில் தரையிறக்கும்.