பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இன்று நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பை சந்திக்கிறார். இவரை இதுவரை ஆதரித்த Pakistan Tehreek-e-Insaf (PTI) எதிராணியுடன் இணைந்ததாலேயே இம்ரான் கான் அரசியல் ஆபத்தை எதிர்கொள்கிறார்.
அதேவேளை தனக்கு எதிராக அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் திட்டமிட்டு சதி செய்கின்றன என்கிறார் இம்ரான் கான். அதற்கு உடந்தையாக எதிர் கட்சிகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அண்மை காலங்களில் இம்ரான் அமெரிக்க எதிர்ப்பு கொள்கையை கொண்டிருந்தார். யுக்கிரைன் யுத்தம் ஆரம்பித்த பின் இம்ரான் ரஷ்யா சென்று பூட்டினுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.
கடந்த 3.5 ஆண்டுகளாக பதவியில் இருந்த இம்ரான் ஏப்ரல் 4ம் திகதி நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பை சந்திக்கிறார்.
இம்ரான் காலத்தில் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததை தமது எதிர்ப்புக்கு காரணம் காட்டுகின்றனர் எதிர்க்கட்சியினர்.