நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரெஞ்சு அரசு கவிழ்ந்தது

நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரெஞ்சு அரசு கவிழ்ந்தது

Michel Barnier என்ற பிரெஞ்சு பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால் Barnier தலைமையிலான அரசு கவிழ்ந்துள்ளது. இவர் 3 மாதங்களுக்கு முன்னரே பிரதமராக பதவி அடைந்திருந்தார்.

சபையில் உள்ள மொத்தம் 577 வாக்குகளில் இவரின் பிரதமர் பதவியை பறிக்க 288 வாக்குகள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் பிரதமரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்துக்கு 331 வாக்குகள் கிடைத்துள்ளன.

தற்போது பிரான்சில் எவருமே ஆட்சி செய்ய முடியாத அளவில் வாக்காளர் ஆதரவு இடது, வலது, மத்திய கொள்கை கட்சிகளுள் முடங்கி உள்ளன.

பிரெஞ்சு சனாதிபதி மக்ரான் விரைவில் புதியதொரு பிரதமரை பதவியில் அமர்த்த வேண்டும். அதற்கு எதிர் கட்சிகளின் ஆதரவு அவருக்கு அவசியம்.