ரஷ்யாவின் சோச்சியில் (Sochi) ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுக்கொண்டு இருந்த பொழுது பூட்டின் (Putin) இராணுவத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் மிக குறைவு என்பதை நன்கு அறிந்த மேற்குலக அரசுகள், ஜனநாய முறைப்படி Ukraine இல் ஆட்சிபுரிந்த ரஷ்யா ஆதரவு அரசை ஜனநாய முறைக்கு அப்பாலான வன்முறைகள் மூலம் துரத்தின. பின் உடனடியாக தமக்கு ஆதரவான யுக்கிறேனியர் (Ukraine) கொண்ட அரசை அமைத்து விடயத்தை வென்று விட்டதாக நம்பியது மேற்குலக அரசியல். ஆனால் முன்னாள் KGB உறுப்பினரான ரஷ்யாவின் தலைவர் பூட்டின் Crimea யாவை கைப்பற்றுவதன் மூலம் விடயத்தை மேலும் குழப்பியுள்ளார்.
இன்று ஞாயிறு Crimea வில் நடைபெற்ற வாக்கெடுப்பின்படி சுமார் 95% மான Crimea வாழ் மக்கள் தாம் Ukraine இல் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைய விரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர் (ஆனால் சுமார் 60% மானோர் மட்டுமே பூர்வீக ரஷ்சியர்). வழமையாக வாக்கெடுப்பு, ஜனநாயகம் என்ற பதங்களை பாவித்து அந்நிய நாடுகளில் அரசியல் மூக்கை நுழைக்கும் மேற்குலக அரசியல் தமக்கு விரோதமான இந்த வாக்கெடுப்பை ஏற்க மறுக்கிறது.
ஆனால் படிப்படியாக மேற்குலகின் பல புத்திஜீவிகளும் சில அரசியல்வாதிகளும் இறுதியில் பூட்டின் வென்றுவிட்டதாக கூறுகின்றனர்.
இப்போது பூட்டினின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதையும் அறியாத மேற்குலக அரசியல், பூட்டின் மீதான பொருளாதார நடவடிக்கைகளைம் அதிகரிக்க முனைகிறது. ஆனால் சில ஐரோப்பிய நாடுகளுக்கு அதிலும் ஆபத்து உண்டு. உதாரணமாக ஜேர்மனி தமது எரிபொருளின் 30% ஐ ரஷ்யாவிடம் இருந்தே பெறுகிறது. ஆசியா போகும் அமரிக்காவின் விமானக்களும் ரஷ்யாவின் மேலாகவே பறக்கின்றன. இவ்வழியை தவிர்ப்பின் அமெரிக்காவின் விமான சேவைகளின் பயண செலவு மற்றைய விமான சேவைகளின் செலவைவிட மிக அதிகமாகும்.
மேற்குலகின் தப்புக்கள் காரணமாக இப்போது பலம் பூட்டின் பக்கம் போயுள்ளது. இதை பயன்படுத்தி பூட்டின், NATO வின் ரஷ்யா நோக்கிய விஸ்தரிப்பு தடுப்பு போன்ற பல மேசைக்கு கீழான தடைகளை போட்டு பின் Ukraine னின் மிகுதி பாகங்களை விட்டுவைக்கலாம். அல்லது Ukraine இன் கிழக்கு மாகாணங்களையும் ஆயுதம் கொடுத்து பிரிய வைக்கலாம். இதையெல்லாம் எப்படி தடுப்பது என்று தெரியாமல் குமுறுகிறது மேற்குலக அரசியல்.
Kosovo, தென் சூடான் , கிழக்கு தீமோர் போன்ற இடங்களில் மேற்குலகு செய்தது இப்போ திரும்பி வந்து அவர்களையே பாதிக்கிறது. மேற்குலகின் தலைமையில் சேர்பியாவில் இருந்து பிரிந்து தனிநாடான Kosovo இன்றுவரை ரஷ்யா உட்பட பல நாடுகளால் ஒரு நாடாக கருதப்படவில்லை.
Crimea யாவை எடுத்துக்கொண்டு ஏனைய Ukraine ஐ விட்டுவிடு என்று சமரசம் போகுமா மேற்குலக அரசியல் அல்லது தொடர்ந்தும் பூட்டின் மீது முட்டி மோதி Ukraine னின் ஏனைய பகுதிகளையும் இழக்குமா?