இலங்கையின் விலைவாசி இந்த ஆண்டு தை மாதம் 14.2% ஆல் அதிகரித்து உள்ளது. தற்போது ஆசியாவிலேயே அதிக விலைவாசி உயர்வை கொண்ட நாடாக இலங்கை உள்ளது. இங்கு விலைவாசி தொடர்ந்தும் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.
இறக்குமதிக்கு தேவையான அந்நியசெலவாணி இன்மை, அதனால் நடைமுறை செய்யப்பட்ட இறக்குமதி தடைகள், உள்நாட்டு அறுவடை பாதிப்பு, உலக அளவில் எரிபொருள் விலை அதிகரிப்பது எல்லாமே இலங்கையின் நெருக்கடிக்கு காரணம்.
இங்கு அரிசி உற்பத்தி மட்டும் சுமார் 50% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. அதனால் அரிசி விலை Rs 300 ஆக உயரலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் இலங்கை $3.1 பில்லியன் அந்நியசெலவாணியை கொண்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு இலங்கை $7 பில்லியன் கடனை அடைக்க வேண்டும். அத்துடன் இறக்குமதிகளுக்கும் அந்நியசெலவாணி தேவை. அத்தொகை அந்நியசெலவாணி எங்கிருந்து வரும் என்று இதுவரை அறியப்படவில்லை.
ஈரானின் எரிபொருளை இறக்குமதி செய்ததால் ஏற்பட்ட $251 மில்லியன் கடனை அடைக்க இலங்கை மாதாந்தம் $5 மில்லியன் பெறுமதியான தேயிலையை ஈரானுக்கு வழங்க உள்ளது.