தேர்தல் வெற்றிக்கு வன்முறையை தூண்டும் ரம்ப்

தேர்தல் வெற்றிக்கு வன்முறையை தூண்டும் ரம்ப்

நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள அமெரிக்கா சனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவக்கூடிய நிலையில் உள்ள சனாதிபதி வன்முறைகளில் ஈடுபடும் தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்க முனைகிறார்.

வெள்ளிக்கிழமை பைடெனின் பரப்புரை பஸ் ஒன்று Texas மாநிலத்தில் உள்ள Austin நகரம் நோக்கி Hwy 35 இல் பயணித்துக்கொண்டிருந்த வேளை அதை சுமார் 100 வாகனங்களை கொண்ட ரம்ப்  ஆதரவு வாகன தொடர் சுற்றிவளைத்து பஸ்ஸை வீதியில் இருந்து தள்ள முயன்றுள்ளன.

அந்த வீதியில் வேகம் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 மைல்கள் ஆக இருக்கையில், இந்த சுற்றிவளைப்பால் பஸ் வேகம் 20 mph ஆக குறைந்து இருந்தது. உடனே 911 போலீசாருக்கு அறிவிக்க, அவர்கள் வந்து பாதுகாப்பு வழங்கினர்.

இந்த வீடியோவை பகிர்ந்த ரம்ப், “I LOVE TEXAS” என்று குறிப்பிட்டு உள்ளார். நாட்டில் சட்டம் ஒழுங்கை நடைமுறை செய்யவேண்டிய சனாதிபதி மாறாக வீதி வன்முறையை ஆதரித்து உள்ளார்.
அந்த பஸ்சில் பைடனோ, கமலாவோ இருந்திருக்கவில்லை. அவர்களின் உதவியாளர்கள் இருந்துள்ளனர்.