தெரேசா இல்லத்தில் குழந்தைகள் விற்பனை?

India

இந்தியாவின் Jharkland மாநிலத்தில் Mother Teresa பெயரில் இயங்கும் Missionaries of Charity என்ற பொதுநல சேவை அமைப்பு குழந்தைகளை விற்பனை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையம் 1950 ஆம் ஆண்டு Mother Theresa அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையம் திருமணமாகாத தாய்மாரை பாதுகாக்கும் ஒரு நிலையமாகும்.
.
இங்கு குறைந்தது 5 அல்லது 6 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று கூறுகிறார் Aman Kumar என்ற அப்பகுதி போலீஸ் அதிகாரி.
.
போலீசார் தற்போது இரண்டு பேரை கைது செய்துள்ளனர். குழந்தை இல்லாத தம்பதி ஒன்று 120,000 இந்திய ரூபாய் வழங்கி குழந்தை ஒன்றை மேற்படி நிலைய ஊழியர் ஒருவரிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளது. ஆனால் பின்னர் குழந்தையை திரும்ப பெற்ற அந்த ஊழியர், செலுத்திய 120,000 ரூபாய் பணத்தை திருப்பி வழங்கவும் மறுத்துள்ளார். அப்போதே பணத்தை செலுத்திய அந்த தம்பதி போலீசாரின் உதவியை நாடி உள்ளது.
.
தாம் தற்போது குழந்தைகளை தத்து வழங்குவது இல்லை என்று கூறுகிறது அந்த நிலையம். தத்தெடுக்கும் முறைக்குள்ளேயே பண வழங்கல் ஊடுருவியதாக கருதப்படுகிறது.
.

1910 ஆம் ஆண்டு பிறந்த Mother Theresa 1997 ஆம் ஆண்டில் மரணமாகி இருந்தார்.
.