இந்தியாவில் பல பாரம்பரிய மொழிகள் உள்ளன. தமிழ் உட்பட பல தென் மொழிகள் உலகிலேயே பாரம்பரிய மொழிகளாக கருதப்படுகின்றன. ஆனால் தென் மொழிககளை வஞ்சித்து, சமஸ்கிருதத்தை பாரம்பரிய மொழியாக வளர்க்க அதிகம் செலவுகளை செய்கிறது ஆட்சியில் உள்ள பா. ஜ. கட்சி அரசு.
.
கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிரதத்ததை வளர்க்க இந்திய அரசு செலவழித்த மொத்த பெறுமதி, அதே காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஓடியா ஆகிய 5 தென் மொழிகளுக்கும் செலவிட்ட தொகையிலும் 22 மடங்கு அதிகம் என்று வெளியிடப்பட்ட தரவுகள் கூறுகின்றன.
.
அத்துடன் சமஸ்கிருதம் மீதான செலவழிப்பு அதிகரித்து செல்ல, தென் மொழிகள் மீதான செலவழிப்பு குறைந்து செல்கிறது.
.
மொழி |
காலம் |
தொகை |
சமஸ்கிரதம் | 2017/18 | 198.31 கோடி |
2018/19 | 214.38 கோடி | |
2019/20 | 231.15 கோடி | |
தமிழ் | 2017/18 | 10.59 கோடி |
2018/19 | 4.65 கோடி | |
2019/20 | 7.7 கோடி |
.
இந்திய கலாச்சார அமைச்சு ஒரு மொழியை பாரம்பரிய (classical) மொழியாக கொள்ள, அம்மொழி குறைந்த 1,500 வருட பழமையான, தரமான ஆக்கங்களை கொண்டிருக்க வேண்டும்.
.