தென் கொரிய விமான விபத்துக்கு குறைந்தது 62 பேர் பலி

தென் கொரிய விமான விபத்துக்கு குறைந்தது 62 பேர் பலி

தாய்லாந்தில் இருந்து தென் கொரியா வந்த Boeing 737 வகை விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதால் குறைந்தது 62 பேர் பலியாகி உள்ளனர். இந்த விமானத்தில் மொத்தம் 175 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்களில் 173 பேர் தென் கொரியர் என்றும் 2 பேர் தாய்லாந்தினர் என்றும் கூறப்படுகிறது.

Jeju Air என்ற விமான சேவைக்கு சொந்தமான விமானமே தென் கொரியாவின் Muan விமான நிலையத்தில் விபத்துக்கு உள்ளானது. இந்த விமானத்தின் சக்கரங்கள் (landing gear) சரியாக இயங்காமையே விபத்துக்கு காரணம் என்று செய்திகள் கூறுகின்றன.

சங்கரங்களின் உதவியுடன் தரை இறங்குவதற்கு பதிலாக இந்த விமானம் அடிப்பாகத்தை தேய்த்து இறங்கியதை வீடியோக்கள் காட்டுகின்றன.

இந்த விபத்து காரணமாக Muan விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது.