டிசம்பர் மாதம் 3ம் திகதி தகுந்த காரணம் இன்றி தென் கொரியாவில் இராணுவ சட்டத்தை (martial law) நடைமுறை செய்த சனாதிபதி Yoon இன்று சனிக்கிழமை பாராளுமன்றத்தில் impeachment மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மொத்தம் 204 பாராளுமன்ற உறுப்பினர்கள் சனாதிபதியை விலக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதில் 12 ஆளும் கட்சி உறுப்பினர்களும் அடங்குவர்.
ஆனாலும் இந்த பதவி நீக்கம் ஒரு தற்காலிகமானதே. இந்த பதவி நீக்கத்தை நீதிமன்றம் அடுத்த 6 மாத காலத்துள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது சட்டமாகும்.அவ்வாறு செய்ய தவறின், சனாதிபதி மீண்டும் பதவியை பெறுவார். இந்த வழக்கை கையாளும் நீதிமன்றமும் ஏற்கனவே குழப்ப நிலையில் உள்ளது.
2004ம் ஆண்டு பாராளுமன்றம் Roh Moo-hyun என்ற அக்கால சனாதிபதியின் பதவியை பறிக்க, நீதிமன்றம் அந்த பதவி பறிப்பை தவறு என்று கூற Roh Moo-hyun மீண்டும் சனாதிபதி ஆகியிருந்தார்.
2016ம் ஆண்டு Park Geun-hye யின் சனாதிபதி பதவியை பாராளுமன்றம் பறிக்க, நீதிமன்றமும் அதை ஏற்று கொண்டதால் Park Geun-hye பதவியை இழந்திருந்தார்.