வட கொரியாவின் நீண்ட தூர ஏவுகணை ஏவல்களுக்கு போட்டியாக தென்கொரியா ஏவிய Hyunmoo-2 என்ற குறுந்தூர ஏவுகணை ஏவிய மறுகணம் கோளாறு காரணமாக பெரும் சத்தத்துடன் வெடிக்க (malfunctioned), அந்த பகுதில் வாழும் தென் கொரியார் வட கொரியாவே தம்மை தாக்கியதாக எண்ணி கலங்கி உள்ளனர்.
Gangneung என்ற வடகிழக்கு கரையோர நகரில் வாழும் மக்கள் உடனே அப்பகுதி தீயணைக்கும் படைக்கு விபத்தை அறிவித்து உள்ளனர். விமானப்படை தளத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினரிடம் வெடித்தது தமது ஏவுகணை என்று கூறி திருப்பி அனுப்பினார் தென்கொரிய படையினர்.
இந்த விபத்துக்கு எவரும் பலியாகவோ அல்லது காயமடையவோ இல்லை என்று தென்கொரியா கூறியுள்ளது.
தென்கொரிய படைகளும், அமெரிக்க படைகளும் தற்போது இணைந்த இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் வடகொரியா சுமார் 40 ஏவுகணைகளை ஏவி உள்ளது.