தென் கொரிய சனாதிபதி Yoon செவ்வாய்க்கிழமை இராணுவ சட்டத்தை நடைமுறை செய்வதாக அதிகாலை தொலைக்காட்சி செய்தி மூலம் அறிவித்துள்ளார்.
தென் கொரியாவை வட கொரிய கம்யூனிஸ்ட்களின் ஆபத்தில் இருந்து பாதுகாக்கவே இந்த இராணுவ சட்டத்தை தான் நடைமுறை செய்வதாக கூறினாலும், அவர் விளக்கம் எதையும் அறிவிக்கவில்லை.
சனாதிபதியின் இந்த எதிர்பார்க்காத அறிவிப்பால் மக்களும், அதிகாரிகளும் வியப்பு அடைந்துள்ளனர்.
சனாதிபதி Yoon இராணுவ சட்டத்தை அறிவித்தாலும் அவரின் conservative கட்சி அதை தவறு என்று கூறியுள்ளது.
People Power Party என்ற சனாதிபதியின் கட்சியும், Democratic Party என்ற எதிர்க்கட்சியும் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முரண்பாடுகளை கொண்டுள்ளனர். ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் சனாதிபதியின் இராணுவ சட்டத்தை தடுக்க முனைகின்றனர்.
தென் கொரிய பாராளுமன்ற கூரையில் ஹெலிகள் இறங்கியதாகவும் கூறப்படுகிறது.