2026ம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் மத்திய அரசின் Lok Saba சபைக்கு அனுப்பும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைய வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே வட இந்தியாவுக்கும், தென் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் முறுகல் நிலை மேலும் உக்கிரம் அடையவும் வாய்ப்பு உண்டு.
1971ம் ஆண்டு இந்தியா செய்து கொண்ட சனத்தொகை கணக்கெடுப்புக்கு அமைய ஒவ்வொரு மாநிலத்துக்கும் அவற்றின் 1971ம் ஆண்டு சனத்தொகைகளுக்கு ஏற்ப Lok Saba ஆசங்கள் வழங்கப்பட்டன.
1971ம் ஆண்டில் பீகார் என்ற வட மாநிலத்தில் 42.1 மில்லியன் மக்களும், தமிழ்நாட்டில் 41.2 மில்லியன் மக்களும் வாழந்திருந்தனர்.
அனால் தற்போது சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் பீகாரில் சனத்தொகை 123 மில்லியன் ஆகவும் தமிநாட்டின் சனத்தொகை 76 மில்லியன் ஆகவும் உள்ளன. அதனால் 2026ம் ஆண்டு சனத்தொகைக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்படும் தொகுதி பங்கீடு தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் பீகாருக்கு அதிக ஆசங்களை வழங்க வேண்டும்.
ஆனாலும் இங்கே தவறு செய்தது தமிநாடு அல்ல. கடந்த 50 ஆண்டுகளாக தொகுதி பங்கீடுகளை மத்திய அரசு இடைநிறுத்தி வைத்ததன் காரணம் இந்தியாவின் சனத்தொகையை கட்டுப்படுத்தவே. இவ்வாறு செய்வதன் மூலம் எந்தவொரு மாநிலமும் தனது சனத்தொகையை அதிகரித்து அதிக ஆசங்களை அடைவதை மத்திய அரசு நிறுத்த விரும்பியது.
அக்கால மத்திய அரசுகள் விரும்பியது போலவே தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் சனத்தொகை கட்டுப்படுத்தப்பட்டன. இந்நிலையில் மத்திய அரசின் விருப்பத்துக்கு முறையான இயங்கிய பீகாருக்கு அதிக ஆசனங்களை வழங்குவது சரியானவரை தண்டித்து பிழையானவருக்கு வெகுமதி வழங்குவது போலானது என்று தென் மாநிலங்கள் வாதாடுகின்றன.
1971ம் ஆண்டில் வட மாநிலங்கள் இந்தியாவின் 43% சனத்தொகையையும், தென் மாநிலங்கள் 24% சனத்தொகையையும் கொண்டிருந்தன. அதற்கேற்ப Lok Saba ஆசனங்களும் 43% ஆகவும், 25% ஆகவும் இருந்தன.
ஆனால் தற்போது வட மாநிலங்களின் சனத்தொகை இந்தியாவின் சனத்தொகையின் 50% ஆகவும், தென் மாநிலங்களின் சனத்தொகை 20% ஆகவும் உள்ளன.
தேசிய அளவில் இந்திய சனத்தொகை 1971ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 150% ஆல் அதிகரித்து உள்ளது. தென் மாநிலங்களில் சனத்தொகை 150% க்கும் குறைவாகவே அதிகரித்து உள்ளது. ஆனால் வட மாநிலங்களில் 150% க்கும் அதிகமாக அதிகரித்து உள்ளது.