தென் ஆபிரிக்காவில் உள்ள International Pentecostal Holiness Church என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற பணயம் வைப்பை தொடர்ந்த தாக்குதல்களுக்கு குறைந்தது 5 பேர் பலியாகி உள்ளனர்.
.
மரணித்தோருள் 4 பேரின் சுடப்பட்டு எரிந்த நிலையில் உள்ள உடல்கள் எரிந்த கார் ஒன்றுள் காணப்பட்டு உள்ளது. இவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வந்த காவலாளியை சுட்டு கொலை செய்யப்பட்ட 5 ஆவது நபர்.
.
போலீசார் மேலும் 40 பேரை கைது செய்துள்ளனர். போலீசார் தாம் 16 நீள துப்பாக்கிகள், 13 கைதுப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்களை கைப்பற்றியதாக கூறி உள்ளனர்.
.
2016 ஆம் ஆண்டு இந்த தேவாலயத்தின் தலைவர் மரணித்த பின் அங்கு அதிகார போட்டி தலையெடுத்து உள்ளது. இன்று தாக்குதலை செய்தவர்கள் தேவாலய தலைமையை தமது கடுப்பாட்டுள் கொண்டுவர முனைபவர்கள்.
.
2018 ஆம் ஆண்டு இந்த தேவாலயத்தின் சுமார் $6.5 மில்லியன் காணாமல் போயிருந்ததாக பத்திரிகை செய்திகள் கூறி இருந்தன.
.