தென் ஆப்பிரிக்காவின் கடலோர பகுதியான Durban நகருக்கு அண்மையில் உள்ள Phoenix என்ற இடத்தில் அந்நாட்டு இந்தியர்களுக்கும், கருப்பு இனத்தவர்களுக்கும் இடையில் சில காலமாக இனக்கலவரம் நிகழ்ந்து வருகிறது. இந்த கலவரங்களுக்கு இதுவரை சுமார் 300 பேர் பலியாகி உள்ளனர்.
ஜூலை 12ம் திகதி 34 வயதான Bhekinkosi Ngcobo என்பவர் இந்திய ஆயுததாரிகளால் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று முறையிடப்பட்டு உள்ளது. இவரின் காரும் எரிக்கப்பட்டு உள்ளது.
சில இந்தியர் சட்டவிரோத முறையில் ஆயுதங்களுடன் தமது பகுதியில் பாதுகாப்பு சேவையில் ஈடுபடுவதாகவும், வீதி தடைகள் வைத்திருப்பதாகவும், அங்கு செல்லும் கருப்பு இனத்தவர் குறிவைக்கப்படுவதகாவும் போலீசார் கூறி உள்ளனர்.
தற்போது 25,000 பாதுகாப்பு படையினர் அங்கு நிலைமையை கட்டுப்பாட்டுள் வைத்துள்ளனர்.
பிரித்தானியர் இந்தியரை தென் ஆபிரிக்கா எடுத்து சென்ற காலம் முதல் இந்தியர் வெள்ளையருக்கு கீழேயும், கருப்பருக்கு மேலேயுமான இரண்டாம் வகுப்பு அதிகாரத்தில் இருந்து வந்துள்ளனர். அந்த நிலை இன்றும் தொடர்கிறது. பல ஆபிரிக்க கருப்பர் காந்தியை வெறுக்க இது பிரதான காரணம்.
தற்போது அங்கு வெள்ளையரின் சராசரி மாதாந்த ஊதியம் $1,674 ஆக உள்ளது. இந்தியரின் சராசரி ஊதியம் $967 ஆகவும், கருப்பரின் சராசரி ஊதியம் $469 ஆகவும் உள்ளன.