தென் ஆபிரிக்காவில் ஆளுமையை இழக்கும் ANC

தென் ஆபிரிக்காவில் ஆளுமையை இழக்கும் ANC

நெல்சன் மண்டேலாவின் ANC (African National Congress) அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் முதல் தடவையாக 50% க்கும் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளது. ANC கட்சி கருப்பு இனத்தவரின் வாழ்கையை மேம்படுத்த தவறியமையே மக்களின் வெறுப்புக்கு காரணமாகியுள்ளது.

அங்கு சுமார் 33% மக்கள் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர். அதில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும் குறைந்தவர்கள்.

சுமார் 82% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ANC 41% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. 1994ம் ஆண்டுக்கு பின் இம்முறையே ANC 50% க்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது.

Democratic Alliance (DA) என்ற கட்சி 22% வாக்குகளையும், முன்னாள் சனாதிபதி Jacob Zuma வின் ஆதரவு கொண்ட MK என்ற கட்சி 13% வாக்குகளையும் பெற்றுள்ளன. EFF என்ற கட்சி 9% வாக்குகளை பெற்றுள்ளது.

அதனால் அங்கு ANC யை உள்ளடக்கிய ஒரு கூட்டணியே இம்முறை ஆட்சியை அமைக்கும்.