தென் ஆபிரிக்காவில் ஊழல் தொடர்பாக தேடப்பட்ட Rajesh Gupta, Atul Gupta ஆகிய சகோதரர்கள் மத்திய கிழக்கு நாடான UAE யில் UAE போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் விரைவில் தென் ஆபிரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவர்.
இவர்கள் இருவரும் முன்னாள் தென் ஆபிரிக்காவின் சனாதிபதி சூமா (Jacob Zuma) காலத்தில் சூமாவுடன் இணைந்து ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. 2016ம் ஆண்டு தென் ஆபிரிக்க அரசு தயாரித்த 355-பக்க அறிக்கை குப்தா சகோதரர்களின் ஊழலை விபரித்து இருந்தது. இவர்கள் சுமார் $3.2 பில்லியன் பெறுமதியான அரச பண ஊழல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
2018ம் ஆண்டு சூமா பதவி விலக்கியவுடன் குப்தா சகோதரர்கள் தமது குடும்பங்களுடன் UAE க்கு தப்பி ஓடியுள்ளனர். ஆனால் சில தினங்களுக்கு முன், ஜூன் 2ம் திகதியே இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த சகோதர்களை அமெரிக்காவும் தடை செய்துள்ளது.
Sanjay Shah, வயது 52, என்பவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் டென்மார்க்கில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.