தற்போது நேபாளத்தில் இடம்பெற்றுவரும் 2019 ஆம் ஆண்டுக்கான தென்னாசிய விளையாட்டு போட்டியில் புதன்கிழமை வரையிலான காலத்தில் இந்தியா 70 பதக்கங்களை பெற்று முன்னணியில் உள்ளது. இதில் 34 தங்க பதக்கங்களும், 23 வெள்ளி பதக்கங்களும், 13 பித்தளை பதக்கங்களும் அடங்கும்.
.
இரண்டாம் இடத்தில் உள்ள நேபாளம் மொத்தம் 69 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் 29 பதக்கங்கள் தங்க பதக்கங்கள்.
.
இலங்கை 8 தங்க பதக்கங்கள், 23 வெள்ளி பதக்கங்கள், 38 பித்தளை பதக்கங்கள் அடங்க மொத்தம் 69 பதக்கங்களை பெற்றுள்ளது.
.
இந்த வருட தென்னாசிய விளையாட்டுகள் மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இடம்பெற இருந்திருந்தாலும், அது பின்போடப்பட்டு டிசம்பர் 1 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இடம்பெறுகிறது.
.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலை தீவு, பூட்டான் ஆகிய 7 நாடுகள் தென்னாசிய போட்டியில் பங்கு கொள்கின்றன.
.