சிரியாவின் பகுதியான இட்லிப் (Idlib) நோக்கி சென்ற துருக்கி படைகள் மீது இன்று திங்கள் சிரியாவின் விமான படைகள் தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
.
சிரியாவின் இட்லிப் பகுதியில் மட்டுமே தற்போது துருக்கியின் ஆதரவு கொண்ட ஆயுத குழுக்கள் இயங்கி வருகின்றன. ஆனால் அந்த பகுதியையும் சிரியா தன்வசம் எடுக்க தாக்குதல்களை செய்து வருகிறது. அந்த தாக்குதல்களில் இருந்து தான் வளர்த்த ஆயுத குழுக்களை காப்பாற்றும் நோக்கிலேயே துருக்கி தனது படைகளை இட்லிப் பகுதிக்கு அனுப்பியது. அந்த படைகள் மீதே தாக்குதல் இடம்பெற்றது.
.
தனது படைகள் மீது துருக்கி தாக்கியது கடந்த வருடம் மேற்கொண்ட உடன்படிக்கைக்கு முரணானது என்கிறது துருக்கி. தாக்குதலுக்கு உள்ளன இராணுவ அணியில் சுமார் 50 துருக்கி கவச வாகனங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
.
சிரியாவின் படைகள் இட்லிப் பகுதியில் உள்ள Khan Sheikhoun என்ற இடத்தை கைப்பற்றும் நோக்கில் தற்போது உள்ளது. இதனூடேயே தலைநகர் Damascus க்கும், அலெப்போவுக்கும் (Aleppo) இடையிலான பெரு வீதி செல்கிறது.
.