சிரியாவின் அல் அசாத் அரசை கவிழ்த்து இஸ்ரேலுக்கும் மேற்குக்கும் ஆதரவான கைப்பொம்மை அரசை அமைக்க மேற்கு சிரியாவில் உள்நாட்டு யுத்தத்தை ஆரம்பித்தது. ஆனால் ஆசாத் ரஷ்யாவின் பூட்டினின் உதவியை நாட, ரஷ்ய படைகள் சிரியா வந்து அசாத் அரசை காப்பாற்றியது.
தமது விருப்பப்படி அசாத் அரசு கவிழாது என்பதை உணர்ந்த மேற்கும், மேற்குடன் இணைந்து இயங்கிய மத்திய கிழக்கு நாடுகளும் மெல்ல தமது தூதரகங்களை சிரியாவின் தலைநகரில் மீண்டும் இயக்க ஆரம்பித்தன.
மேற்குடன் இணைந்து சிரியாவை தாக்கிய துருக்கியும் தற்போது சிரியாவுடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளது. துருக்கியின் உளவு படை (National Intelligence Organization) தலைவர் Hakan Fidan சிரியாவின் உளவு படை தலைவர் Ali Mamlouk ஆகியோர் இந்த கிழமை சிரியாவின் தலைநகரில் சந்தித்து உரையாடினர் என்று கூறப்படுகிறது.
அடுத்து இரண்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் சந்திக்கக்கூடும். இந்தியா தான் வளர்த்த இலங்கை ஆயுத போரை கைவிட இலங்கை ஆயுத போராட்டம் கலைந்ததுக்கு ஒப்ப துருக்கி கைவிட சிரியாவின் அரச எதிர்ப்பு ஆயுத போர் கலைந்துபோகும்.
துருக்கி, சிரியா நேரடி உரையாடலை ரஷ்யா ஊக்குவித்து இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
அசாத்தை எதிர்த்து போராடிய ஆயுத குழுக்களுக்கு துருக்கி மூலமே மேற்கு நாடுகள் ஆயுதம் உட்பட்ட உதவிகளை வழங்கி இருந்தன.
ரஷ்யா மட்டுமன்றி ஈரானும் சிரியாவுக்கு பெருமளவில் உதவி இருந்தது.
அமெரிக்கா ஏற்கனவே சிரியா விசயத்தை கைகழுவி உள்ளது.