துருக்கி சிரியாவின் Kurdish மீது தாக்குதல்

Afrin

துருக்கி (Turkey) இராணுவம் சிரியாவில் (Syria), துருக்கி எல்லையை அண்டியுள்ள Afrin நகரை கைக்கொண்டுள்ள YPG என்ற Kurdish குழு மீது இன்று ஞாயிறு தாக்குதலை ஆரம்பித்து உள்ளது.
.
YPG என்ற Kurdish குழுவை அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் IS குழுவை அழிக்க வளர்த்திருந்தன.
.
ஆனால் NATO உறுப்பு நாடான துருக்கி சிரியாவில் உள்ள Kurdish Democratic Union கட்சியையும், அதன் ஆயுத அமைப்பான YPG குழுவையும் பயங்கரவாத குழுக்களாகவே கணிக்கிறது.
.
துருக்கி இராணுவம் சிரியாவுள் நுழைந்ததை அறிவித்த துருக்கி அரசு, தாம் 30 km நீளம் கொண்ட பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைக்கவுள்ளதாக கூறியுள்ளது. பின்னர் தாம் Manbij என்ற நகரில் உள்ள YPG நிலையங்களையும் அழிக்கவுள்ளதாக துருக்கி கூறியுள்ளது.
.
துருக்கி இராணுவத்தின் தாக்குதல்களுக்கு இதுவரை 7 Kurdish குழு உறுப்பினரும், 21 பொதுமக்களும் பலியாகி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. பொதுமக்களின் அழிவை தவிர்க்கும்படி அமெரிக்கா கேட்டுள்ளது.
.
கடந்த சில நாட்களாக துருக்கியின் யுத்த விமானங்கள் YPG நிலையங்களை தாக்கி அழித்து இருந்தன.
.
Afrin நகரம் Kurdish மக்கள் அதிகள் வாழும் இடம்.

.