திருமங்கை ஆழ்வார் சிலையை மீட்க முயற்சி

Thirumangkai
தற்போது பிரித்தானியாவின் Oxford பல்கலைக்கழக ஆஸ்மோலென் தொல்பொருள் காட்சியகத்தில் (Ashmolean Museum) உள்ள 15 ஆம் நூற்றாண்டு திருமங்கை ஆழ்வார் சிலையை இந்தியா மீட்க முயற்சிக்கிறது. அதற்கேற்ப சட்டப்படியான வேண்டுகோளை இந்தியா விடுத்துள்ளது.
.
அண்மையில் வெளிவந்த 1957 ஆம் ஆண்டு புகைப்படம் ஒன்று மேற்படி சிலை தமிழ்நாட்டு ஸ்ரீ சௌந்தராஜப்பெருமாள் கோவிலில் இருந்ததை உறுதிப்படுத்தியதே சிலை மீடுப்பு முயற்சிகள் ஆரம்பிக்க காரணம். அங்கிருந்த சிலை களவாடப்பட்டு, பதிலுக்கு ஒரு பொய் பிரதியை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
.
சுமார் 1 மீட்டர் உயரமான இந்த பித்தளை சிலையை மேற்படி காட்சியகம் 1967 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்திருந்தது. அதற்கு முன்னர் இந்த சிலை Dr JR Belmont வசம் இருந்தது. இந்த சிலை எப்படி பிரித்தானிய சென்றது என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை.
.
1678 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி தொல்பொருள் காட்சியகத்தில் உலகின் பல பாகங்களில் இருந்து எடுக்கப்பட்ட தொல்பொருட்கள் உள்ளன.
.