இன்று Washington Post பத்திரிக்கையில் Sara Lazar என்ற நரம்பியல் வைத்தியர் ஒருவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தியானத்துக்கும் தற்போதைய விஞ்ஞான விளக்கங்களுக்கும் முடிச்சு போட்டுள்ளார். அவரின் பரிசோதனை முடிபுகளின்படி தியானம் மனித மூளையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி அந்நபரை அமைதி கொள்ள வைக்கிறதாம்.
.
Sala Lazar தற்போது Massachusetts General Hospital மற்றும் Harvard Medical School களில் நரம்பியல் வைத்தியராக கடமை புரிபவர். இவர் Boston marathon ஓட்டப்போட்டிக்கு தன்னை தயார் செய்கையில் ஏற்பட்ட நோவுகளை குணப்படுத்த physical therapist ஒருவரை நாடியுள்ளார். அவர் Saraவை ஓடுதலை நிறுத்திவிட்டு stretching போன்ற பயிட்சிகளை செய்யுமாறு கூறியுள்ளார். அதன்படி Sara யோகாசனம் (yoga) செய்ய ஆரம்பித்தார். விரைவில் அவர் அமைதியானவராகாவும், சர்ச்சையான நேரங்களில் விடயங்களை இலகுவில் கையாள்பவராகவும் மாறியதை உணர்ந்தார். தியானத்தால் பயனடைந்த Sara தியானம் பற்றி மேலும் ஆராய முற்பட்டார். விளைவாக தியானத்தையே தனது PhD க்கு பினனரான ஆய்வுக்கு உட்படுத்தினார்.
.
அவரின் ஆய்வின்படி மூளையின் 4 பாகங்கள் அளவில் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். அவையாவன:
.
1) Posterior cingulate – நவீன விஞ்ஞானப்படி இதுவே நமது மூளையில் அறிவை/உண்மையை தேடுதலுக்கான வேலையை செய்வது.
.
2) Left hippocampus – இதுவே படித்து அறிதல், சிந்திக்கவைத்தல், ஞாபகத்தில் வைத்தலை கட்டுப்படுத்தல் போன்ற வேலைகளை செய்வது.
.
3) Temporo parietal junction – இதுவே கருணையாக இருத்தல் (compassion) வேலைகளுக்கு காரணமாக இருப்பது.
.
4) Pons – இதுவே நரம்புகளில் செய்திகள் பரவ உதவுவது.
.
அது மட்டுமன்றி தியானம் மனிதனுள் பயம் (fear) மற்றும் பதட்டம் (stress) போன்றவற்றுக்கு காரணமான amygdala என்ற மூளைப்பாகம் சிறு செய்வதாகவும் கூறியுள்ளார்.
.
இவரின் கருத்துப்படி நாள் ஒன்றுக்கு 40 நிமிடமாக, தொடர்ந்து 8 கிழமைகள் தியானம் செய்தால் பயனை காண்பீர்களாம்.